மறைந்த நடிகர் முரளியின் 2-வது மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படம், 'நேசிப்பாயா'. அதிதி ஷங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜன.14-ல் வெளியாகும் இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இதன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் கூறும்போது, “எல்லோர் வாழ்விலும் மாமனார் ஸ்பெஷலான உறவு. அது ஆகாஷுக்கு அமைந்திருக்கிறது. அவருக்கு நல்ல படங்கள் செய்ய ஆசை. அதற்கு ஆதரவு கொடுக்கும் மாமனார் கிடைத்திருக்கிறார். அத்தனை உழைப்பையும் கொடுத்து விடுங்கள். தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் உங்கள் அப்பாவுக்குக் கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள். ஆகாஷுக்கு முதல் படமே பொங்கல் ரிலீஸாக அமைந்திருக்கிறது. எல்லாமே சரியாக இருப்பதால் முதல் பாலிலேயே சிக்சர் அடித்து விடுங்கள்" என்று அறிவுரை கூறினார்.