‘2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’- டெல்லியில் இபிஎஸ் தன்னை சந்தித்துவிட்டுச் சென்ற பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட இந்த எக்ஸ் தள பதிவு மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைவதற்கு கட்டியம் கூறி இருக்கிறது.
அமித் ஷா உடனான 45 நிமிட சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய, இபிஎஸ். “இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணி வேறு, கொள்கை வேறு. தேர்தல் நெருங்கும்போது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மாறும்” என்று மட்டும் சொன்னார்.