மும்பை: ஆசிய கோப்பையை இந்திய கிரிக்கெட் அணியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளதாக தகவல்.
கடந்த மாதம் 28-ம் தேதி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சூழலில் வெற்றிக் கோப்பையை பாகிஸ்தான் நாட்டு அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து பெற இந்திய அணி மறுத்துவிட்டது. இந்த சூழலில் கோப்பையை வழங்காமல் கையோடு கொண்டு சென்றார் நக்வி.