ஷார்ஜா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை யு-19 அணி 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லக்வின் அபேசிங்கே 69, ஷாருஜன் சண்முகநாதன் 42 ரன்கள் சேர்த்தனர். இந்தியா யு-19 அணி சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட்களை வீழ்த்தினார். கிரண், ஆயுஷ் மகத்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.