ராஜ்கிர்: பிஹார் மாநிலம் ராஜ்கிரில் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – கஜகஸ்தான் மோதின.
இதில் இந்திய அணி 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இது இந்திய அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 9 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி. இதே பிரிவில் சீனா 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து சூப்பர் 4 சுற்றில் நுழைந்தது.