புதுடெல்லி: ஆசிய பாட்மிண்டன் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி வரும் பிப்ரவரி 11 முதல் 16 வரை சீனாவில் உள்ள கிங்டாவோ நகரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் அணிகளை இந்திய பாட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற தொடரில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது.
இந்திய அணிகள் விவரம்: ஆடவர்: லக்சயா சென், ஹெச்.எஸ்.பிரனாய், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர்.அர்ஜூன், சதீஷ் குமார்.