மதுரை: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெட் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும். கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்ச தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
The post ஆசிரியர் நியமனம்.. தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்: ஐகோர்ட் கிளை திட்டவட்டம்! appeared first on Dinakaran.