சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்பட்டது. அவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடனே நியமன ஆணை வழங்க 6 மாதங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறேன். எனவே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3192 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.
The post ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.