புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நல வாரியம் அமைக்கவும், ஆட்டோவுக்கு செயலி உருவாக்கவும் கோரி ஆட்டோ தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தது. ஏப்.15க்குள் நல வாரியம் உருவாக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்த நிலையில் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.
The post ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.