“ஆண்டனி தட்டிலை திருமணம் செய்தது தான் எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்” என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 12-ம் தேதி கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் இருவரும் நீண்ட வருடங்கள் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் முடிந்த கையுடன் ‘பேபி ஜான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ்.