சென்னை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், டி.ஆண்டிப்பட்டி கிராமத்தில் கழிவுநீர்க் குழியில் மூழ்கி உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில், “மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், டி.ஆண்டிப்பட்டி கிராமத்தில் வசித்துவரும் திரு. சந்தனகருப்பு – திருமதி. கிருஷ்ணவேணி தம்பதியரின் இரண்டு குழந்தைகள் கேசவன் (வயது 4) மற்றும் ரோஷன் ஆகிய இருவரும் கடந்த 15.3.2025 அன்று மாலை 4.00 மணியளவில் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த கழிவுநீர்க் குழியில் விழுந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் நீரில் தத்தளித்த ரோஷன் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு குழந்தை கேசவன் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த குழந்தை கேசவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post ஆண்டிப்பட்டியில் கழிவுநீர் குழியில் மூழ்கி இறந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!! appeared first on Dinakaran.