புதுடெல்லி: மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட உள்ளது.
திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் கட்டாயம் இடம்பெறுவது இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விதி சர்ச்சைக்குரிய விஷயமாக எதிர்க்கட்சி தரப்பில் பார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.