சென்னை: ஆதார் அட்டை அப்டேட் செய்வதற்கான சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ). இந்த கட்டண உயர்வு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வங்கி சேவை, அரசுத் துறை சேவைகள், தொலைபேசி இணைப்பு உட்பட பல்வேறு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்தச் சூழலில் இதில் பயனர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ஆதார் சேவை மையங்களில் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. பயனருக்கு வழங்கப்படும் சேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.