சென்னை: தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடர்களின் நலனை பேணவும், அவர்களுக்கான திட்டங்களை கண்காணிக்கவும், ஆலோசனை வழங்கவும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நலக்குழு மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையச் சட்டம் 2021ம் ஆண்டு இயற்றப்பட்டதால், ஏற்கனவே செயல்பட்டு வந்த மாநில அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவிற்கு நீட்டிப்பு வழங்க அவசியம் எழவில்லை. தற்போது இந்த ஆணையம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் தீர்வுகளையும் உரிய முறையில் வழங்கி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.
The post ஆதிதிராவிடர் நல குழுவிற்கு நீட்டிப்பு வழங்கவில்லை: துறை செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.