சென்னை: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், திட்ட மதிப்பீட்டில் 35 சதவிதம் மூலதன மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டி மானியம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை, 2,386 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்கு ரூ. 259 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2025-26 ஆண்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 170 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிட, பழங்குடியின தொழில்முனைவோருக்கு ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.