அனந்தபூர்: திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விட்டு வேனில் வீடு திரும்பிய பக்தர்கள் 4 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம், சத்யசாய் மாவட்டம் குடிபண்டா மற்றும் அமராபுரம் கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் மொத்தம் 14 பேர் ஒரு வேனில் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.