சேலம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – சண்டிகர் இடையிலான ஆட்டம் நேற்று சேலத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவரில் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
18 வயதான ஆந்த்ரே சித்தார்த் 143 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசினார். இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது. நாராயண் ஜெகதீசன் 63, முகமது அலி 40, பாபா இந்திரஜித் 49 ரன்கள் சேர்த்தனர். சண்டிகர் அணி சார்பில் விஷு காஷ்யப் 5, ஜக்ஜித் சிங் 2, நிஷங் பிர்லா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 2-வது நாளான இன்று சண்டிகர் தனது பேட்டிங்கை தொடங்குகிறது.