சென்னை: ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு குலுக்கல் முறையில் 75 பயணிகளை தேர்வு செய்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயணச்சீட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யும் வகையில், ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு முறை (OTRS) உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உட்பட 7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் பயணம் செய்து பயன் பெறுகின்றனர்.