ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தே அதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என வழக்கு தொடர்ந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பொருள் இழப்பு மற்றும் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.