புதுடெல்லி: ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் ஆகியவற்றுக்கு தடை விதிக்க மாநிலங்கள் சட்ட இயற்றலாம் என மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், ‘‘ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தடை விதிக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்? ஆன்லைன் விளையாட்டுக்கு தமிழகம் தடைவிதித்துள்ளது’’ என்றார்.