ஐபிஎல் சீசனின் 57வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சிஎஸ்கேவுடன் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரை முன்னெடுத்த இந்தியா ராணுவத்தினரை கவுரவிக்கும் விதமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மைதானத்தில் வரிசையாக நின்று மரியாதை செலுத்தினர். வழக்கமாக ஐபிஎல் போட்டிகளில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை. இந்த நிலையில் இன்று தேசிய கீதம் பாடப்பட்டது கவனிக்கத்தக்கது. அத்துடன் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய எல்இடி திரையிலும் இந்தியா ராணுவத்தினரை கவுரவிக்கும் வாசகங்கள் இடம்பெற்றன.