சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங்கை ஒரு கும்பல் கடந்தாண்டு ஜூலையில் படுகொலை செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.