புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர் கைலாஷ் கெலாட் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். அத்துடன் கட்சியில் இருந்தும் விலகினார்.
டெல்லியில் கடந்த 9 ஆண்டுகளாக ஆத் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. மதுபான கொள்கை நடைமுறையில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜாமீனில் வெளியில் வந்த கேஜ்ரிவால், தனக்கு பதில் இளம் தலைவர் அதிஷியை முதல்வராக்கினார். டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று குற்றமற்றவன் என்று நிரூபித்த பிறகு முதல்வர் பதவியேற்பேன் என கேஜ்ரிவால் கூறினார்.