தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பது ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையில் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
ஆனந்த் எல்.ராய் படத்தினை முடித்துவிட்டு, விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். மேலும் அவர் இயக்கத்தில் உருவாகும் வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் பணிகளிலும் கவனம் செலுத்தவுள்ளார். இப்படங்கள் தவிர்த்து தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோரது படங்களிலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.