ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களி்ல் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அதனால், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கான தண்டனை விவரங்கள், மக்கள் பார்வையில் தெரியும்படி காட்சிப்படுத்துதல் வேண்டும்.