பெங்களூரு: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இணை ஸ்பான்ஸராக ‘நத்திங்’ தொழில்நுட்ப நிறுவனம் இணைந்துள்ளது. இந்திய சந்தையில் தங்களது பிராண்டினை பிரபலப்படுத்தும் வகையில் இந்த நகர்வை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
ஐபிஎல் 2025 சீசன் இன்று (மார்ச் 22) தொடங்கி உள்ளது. இதில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளில் ஒன்றாக உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியை இந்த சீசனில் ரஜத் பட்டிதார் வழிநடத்துகிறார். இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் ஆர்சிபி பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளது.