பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் லக்சயா சென்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-13, 21-10 என்ற நேர் செட் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.