சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக இருக்கிறார். தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுக்கிறார். இது கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது.