டெல்லி : ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. மசோதாவை நிறுத்தி வைத்தற்கான காரணம் குறித்து விளக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்புக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மசோதா ஒப்புதல் விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு விசாரணை பின்வருமாறு..
தமிழ்நாடு அரசுத் தரப்பு: குடியரசு தலைவருக்கு ஒரு மசோதா அனுப்பபட்டால், அவர் அதன் மீது தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாறாக, குடியரசு தலைவர் ஒன்றிய அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்றுதான் முடிவெடுக்க முடியும். னவேதான், முடிவு எடுப்பது ”aid and advice” அடிப்படையில் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநர் தனது விருப்பத்தின்படி, முடிவு எடுக்க முடியாதா?
தமிழ்நாடு அரசுத் தரப்பு: அரசியல் சாசனத்தின் அடிப்படையில், மாநில அமைச்சரவை ஆலோசனைப்படியே ஆளுநர் முடிவடுக்க முடியும்.மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டவிரோதம்.
தமிழ்நாடு அரசு வாதம்: அரசியல் சாசன பதவி வகிக்கும் ஒருவர், அரசியல் சாசன விதிகளுக்கு மாறாக ஒரு மாநிலத்தின் மக்களை அவமதிப்பது, மாநிலத்தை செயல்படவிடாமல் தடுப்பது ஜனநாயகத்தின் தோல்வியாகும்.
ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதம்: ஆளுநர் ஏதோ தேவையில்லாத இடத்தில் உள்ளார் என்று சித்தரிக்கப்படுகிறது.
நீதிபதிகள்: ஆளுநர் பதவியை, அவரது அதிகாரத்தை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏன் 12 மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றுதான் கேட்கிறோம். 2 மசோதாக்களை ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்? 10 மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்க மறுத்தார்? என்பதுதான் கேள்வி.
நீதிபதிகள்: அரசு மறுபடியும் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் போது மசோதாக்களை ஆளுநரால் நிறுத்திவைக்க முடியுமா?
ஆளுநர் தரப்பு: ஆளுநர் மசோதாவை திரும்ப அனுப்பினால் அதனை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றுமனால் அது சட்டமாகிவிடும், பல்கலை. துணை வேந்தர் என்பது ஒரு மிக முக்கிய பொறுப்பு, அதனை அரசு மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்களா?
நீதிபதிகள்: அரசு என்ன செய்ய முன்வருகிறதோ அது ஆளுநருக்கு பிடிக்கவில்லை என்றால் அது அவருடைய சொந்தக் கருத்துதானே?
ஆளுநர் தரப்பு: தமிழ்நாடு அரசு மறைமுகமாக நீதிமன்றத்தின் மூலம் தங்களது மசோதாக்களை சட்டப்பூர்வமக்க கோருகிறார்கள்.
நீதிபதிகள்: நாங்கள் கேட்பது, அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வாய்ப்பு இருந்தபோது, ஏன் 2 மட்டும் முதலில் அனுப்பினார்? என்பதைக் கூறுங்கள்
நீதிபதிகள்:ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நிறுத்தி வைத்தார் (with hold) என்றால் அது எந்த பிரிவின் படி?, அரசியல் சாசனம் 200 அல்லாமல் வேறு ஏதேனும் விதிமுறை உள்ளதா?
நீதிபதிகள்:ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவு எடுத்துள்ளார். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இல்லாமல் மசோதாக்களை நிறுத்தி வைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது.
நீதிபதிகள்:ஆளுநர் ஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். 10 மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்ததற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும்.
இவ்வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post ஆளுநர் மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவு appeared first on Dinakaran.