சென்னை: தமிழக அரசு, ஆவின் நிறுவன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பால் விநியோகிக்கும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள 120 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தை லாபத்தில் இயக்க வேண்டும், ஆவினுக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டால் தான் தமிழக மக்கள் பயன் பெறுவார்கள். தமிழ்நாட்டில் 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கின்ற வேளையில் சுமார் 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கிறார்கள். இந்நிலையில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.