காசா: ஆஸ்கர் விருது பெற்ற ‘நோ அதர் லேண்ட்’ என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். ‘நோ அதர் லேண்ட்’ படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
‘‘எங்கள் ‘நோ அதர் லேண்ட்’ படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர்’’ என்று சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
The post ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குனரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம் appeared first on Dinakaran.