லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் புரோ லீக் ஹாக்கி போட்டித் தொடரில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் வைஷ்ணவி பால்கே ஒரு கோலும்(3-வது நிமிடம்), ஆஸ்திரேலிய அணி சார்பில் அமி லாட்டன்(37-வதுநிமிடம்), லெக்ஸி பிக்கரிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.