
அடிலெய்டு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் 2-வது போட்டியில் இன்று அடிலெய்டில் மோதுகின்றன.

