கோவை: இந்தியா – இங்கிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் 2 ஆண்டுகளுக்குள் 5 சதவீத கூடுதல் சந்தையை இந்தியா பிடிக்கும் என ஜவுளித் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பின் (சிட்டி) முன்னாள் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: இங்கிலாந்து நாட்டுக்கான ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி தொழிலில் வங்கதேசம், பாகிஸ்தான், கம்போடியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகளால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தடையற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால் மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் இந்திய ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போட்டித் திறன் அதிகரிக்கும்.