தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், தனது தொண்டு நிறுவனம் மூலம், சேவைகளும் செய்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சினிமா பங்களிப்பையும் சமூக தொண்டுகளையும் அங்கீகரிக்கும் விதமாக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ‘திங்க் டேங் பிரிட்ஜ் இந்தியா’ என்ற அமைப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழவையான ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸி’ல் இவ்விருதை வழங்கியது.