நடந்து முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி 2025 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே பெரிய அளவில் பேசப்படும் தொடர்களின் வரிசையில் இணைந்தது. காரணம் இரு அணிகளும் கடுமையாக ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆடியதே.
இங்கிலாந்து பாஸ்பால் வந்த புதிதில் ஆட்டத்தினை பொழுதுபோக்கு அம்சம் என்று கருதினர், இப்போதுதான் அவர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டுள்ளது. காரணம் உலகக்கோப்பையை வெல்ல கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் பிடித்தது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற ஆவல் அந்த அணிக்குத் தலைதூக்கியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா கடுமையான பல போராட்டங்களூக்கிடையில் ஆஸ்திரேலியாவை இறுதியில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்கள் ஆனதும் இங்கிலாந்தை தூண்டி விட்டுள்ளது.