புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறை வெளியிட்ட உத்தரவில், ‘‘விஐபி பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய ஆயுத படை பணியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதத்தில் சிறப்பு பாதுகாப்பு அலவன்ஸ் வழங்குவதற்கான ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவு ஆய்வுசெய்யப்பட்டது. இசட் பிளஸ் மற்றும் இசட் பிளஸ்(ஏஎஸ்எல்) பிரிவில் விஐபி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுத படையை சேர்ந்த கமாண்டோக்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு ஊதிய அலவன்ஸ் அனுமதிக்கப்படும்.
இசட், ஒய் பிளஸ், ஒய் மற்றும் எக்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் குறைந்த விஐபி பாதுகாப்பில் உள்ள விஐபிக்களை பாதுகாக்கும் பணியாளர்களுக்கு இந்த சிறப்பு அலவன்ஸ் கிடைக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அடங்குவார்கள்.
The post இசட் பிளஸ் பிரிவில் வரும் விஐபி கமாண்டோக்களுக்கு சிறப்பு ஊதிய அலவன்ஸ் appeared first on Dinakaran.