புதுடெல்லி: இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சிக்கான முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. இடதுசாரி தீவிரவாதப் பிரச்சினையை முழுமையாகக் கையாள்வதற்காக, "இடதுசாரி தீவிரவாதத்திற்கு தீர்வு காண்பதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம்" 2015-ல் அங்கீகரிக்கப்பட்டது.