புதுடெல்லி: “நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 31, 2026க்குள், இந்தியா 100% நக்சலைட் இல்லாததாக மாறும்.” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நமது நாடு ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நக்சல் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய முன்னேற்றமாக, இடதுசாரி தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 12 இல் இருந்து வெறும் 6 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.