தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கவுள்ளது. இதற்காக சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் அடங்கிய படக்குழுவினர் பாங்காக் சென்றிருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
‘இட்லி கடை’ படத்தின் இதர காட்சிகள் படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்துவிட்டது. இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துவிட்டார்கள்.