பூரி ஜெகந்நாத் படம் தொடர்பாக இணையத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். பூரி ஜெகந்நாத் உடன் இணைந்து பணிபுரிய இருப்பது குறித்து விஜய் சேதுபதி, “எனது படத்தின் இயக்குநர்களை அவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை வைத்து மதிப்பிடுவதில்லை. எனக்கு ஒரு கதை பிடித்திருந்தால், நான் அதையே தேர்ந்தெடுப்பேன். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது.
இதே போன்று ஒரு முழுமையான அதிரடிப் படத்தை, இதற்கு முன்பு நான் செய்ததில்லை. நான் முயற்சிக்காத கதைகளை ஆராய்ந்து செய்கிறேன். ஏனென்றால் நானே செய்த ஒரு கதையை மீண்டும் செய்வதை தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.