ஈரோடு: கடந்த இடைத்தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே… நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே’ என்று பாடல் பாடி, வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் திமுக வேட்பாளரை, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வரவேற்றதால் கலகலப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி தலைமையிலான திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.