ரோம்: இத்தாலியில் கேபிள் கார் கம்பி அறுந்து விழுந்த விபத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இத்தாலியின் நேபிள்ஸ் நகருக்கு அருகே உள்ள மலை பகுதிக்கு கேபிள் கார் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்ப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கேபிள் கார் சேவை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மவுண்ட் பெய்ட்டோ பகுதியில் ஒரு கேபிள் கார் மலை உச்சியை நெருங்கிய போது கம்பி அறுந்து விழுந்ததில் கேபிள் வண்டி விழுந்தது. இதில் 4 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இன்னொரு கேபிள் கார் பள்ளத்தில் இருந்ததால் அதில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு விகோ ஈகொன்ஸ் மேயர் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் இறந்தவர்களில் இருவர் பிரிட்டன்,இஸ்ரேலை சேர்ந்தவர்கள். இன்னும் 2 பேர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.
The post இத்தாலியில் கேபிள் கார் அறுந்து 4 பேர் பலி appeared first on Dinakaran.