புதுடெல்லி: இந்தியன் வங்கி அலுவலர் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண் மறைக்கப்படுவதன் நோக்கம் என்ன என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை தொகுதி எம்பியான சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “பொதுத் துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் உள்ளூர் மட்டத்திலான அலுவலர்களுக்கான 300 பணி நியமனத்துக்கான அறிவிக்கை ஆக.31-ல் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்.9 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அக்.10-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் அடுத்த கட்டத்துக்கு 1,305 பேர் அனுமதிக்கப்பட்டு, அவர்களது பெயர் பட்டியல் நவ.27-ல் வெளியானது.