“வரி விவகாரத்தில் இனி இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் 50% வரி விதித்த பின்னர் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா ஜீரோ வரி என்கிறது. காலம் கடந்த அறிவிப்பு இது” என்றெல்லாம் கூறிவந்த ட்ரமப் திடீரென ஞானோதயம் பிறந்ததுபோல் ஒரு ‘பல்டி’ பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இரு பெரிய நாடுகளுக்கும் வர்த்தக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.