துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து போட்டி அரையிறுதி வாய்ப்புக்கான போட்டி என்றால் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். மாறாக, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திப்பதை தவிர்ப்பது எப்படி என்று இரு அணிகளும் பெரிய அளவில் போட்டாப் போட்டியுடன் ஆடியது போலவே இருந்தது.
அதாவது, வெற்றி பெறுவது குறித்து இரு அணிகளுக்கும் பெரிய ஆர்வமில்லை. கடைசியில் இந்த ஆர்வத்தில் நியூஸிலாந்து அணி ‘வென்றது’. எப்படி எனில், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்காமல் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது நியூசிலாந்து. வெற்றி பெற ஆர்வமில்லாவிட்டாலும் வருண் சக்ரவர்த்தி போன்ற ஓர் அற்புதமான பவுலரை வைத்துக் கொண்டு வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்திய அணி, ஆஸ்திரேலியாவைச் சந்தித்தாலும் பரவாயில்லை என்று வெற்றி பெற்றது.