சென்னை: இந்தியாவின் தோல் அல்லாத காலணி தொழில் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது. நைட், க்ராக்ஸ், பூமா, அடிடாஸ் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் ஒப்பந்த தயாரிப்பாளர்களை தமிழ்நாடு கவர்ந்துள்ளது. பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருவதால் மென் பொருள் நிறுவனங்கள் முதல் கார் ஆலைகள் வரை ஈர்க்கப்படுகின்றன. இந்நிலையில், தொழில் துறைக்கான நிலப்பரப்பை பன்முக படுத்தும் முயற்சிகளை ரெட்டிப்பாக்கியுள்ள தமிழ்நாடு அரசு தொல் அல்லாது காலணி உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் உள்ள எறையூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட ஜே.ஆர்.ஒன் கோத்தாரிஸ் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமெரிக்க நிறுவனமான கிராக்ஸ் பிராண்ட் காலணிகளை தயாரித்து வருகிறது.
இங்கு பணியாற்றும் 2500 ஊழியர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் இதில் அதிகம் திறன்கள் தேவைப்படாது என்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த குறைந்த அளவே கல்வி பயின்ற ஏராளமான பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது 5 தைவான் நிறுவனங்கள் தோல் அல்லாத காலணி தொழிலை தொடங்கி உள்ளனர். ஃ பெங் டே நிறுவனங்கள் செய்யாறு, பர்கூர், திண்டிவனம் ஆகிய இடங்களில் தோல் அல்லாத காலணிகளை தயாரித்து வருகிறது. யரையூரில் காலணிகளை தயாரித்து வரும் ஷு டவுன் நிறுவனம் கரூரில் காலணி தொழிற்சாலை ஒன்றையும் அமைத்து வருகிறது. பவ் சான் நிறுவனம் கள்ளக்குறிச்சியிலும், ஹாங் ஃபு நிறுவனம் ராணிப்பேட்டையிலும் டீன் ஷு ஸ் நிறுவனம் ஜெயம்கொண்டத்திலும் தொல் அல்லாத காலணிகளை அமைத்து வருகின்றன.
உலக அளவில் தோல் அல்லாத காலணிகளின் பயன்பாடு 86 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தியாவின் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் தமிழ்நாடு 38 சதவீத பங்கினையும், தோல் ஏற்றுமதியில் 47 சதவீதத்தையும் வகித்து வருகிறது. தைவானின் பல்வேறு பன்னாட்டு தோல் அல்லாத காலணி ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தமிழ்நாட்டில் சுமார் ரூ.17,550 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ள தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இதன் மூலம் 2.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகி இருப்பதாக கூறி உள்ளார் தமிழ்நாட்டை இந்தியாவின் தோல் அல்லாத காலணி தொழிலின் மையமாக மாற்ற தைவானில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மேற்கொண்ட 3 ஆண்டுகால கடின முயற்சியால் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.
The post இந்தியாவின் தோல் அல்லாத காலணி தொழில் தலைநகராக மாறிய தமிழ்நாடு: பெரம்பலூரில் தயாராகும் “க்ராக்ஸ்” பிராண்ட் காலணிகள் appeared first on Dinakaran.