இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக, நிவின் பாலி நடிக்கும் படத்துக்கு ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்கும் இந்தப் படத்தின் கதை, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள், புராண கதைகள் மற்றும் மல்டிவெர்ஸ் சூழலுடன் இணைந்திருக்கும்.
இதன் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தின் கதையை, ஆனந்த் எஸ். ராஜ், நிதி ராஜ் இணைந்து எழுதியுள்ளனர். கதாசிரியர் அனீஸ் ராஜசேகரனும் பங்களிப்பை வழங்கி இருக்கிறார். மலையாளத்தில் உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.