இந்தியாவில் ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்து பெரும் சாதனை புரிந்துள்ளது.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’. இந்தியாவில் ஜூலை 4-ம் தேதி வெளியானது இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படம் இந்தியாவில் மொத்த வசூலில் ரூ.100 கோடியை கடந்திருக்கிறது. இதற்குப் பின் வெளியான ‘சூப்பர் மேன்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.