புதுடெல்லி: ட்ரம்பின் சமீபத்திய கருத்துகளால் இந்திய அதிகாரிகள் விரக்தியடைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அமைய உள்ளது குறித்து ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.
நீண்ட காலமாகவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அறிவிக்கப்படாத வர்த்தகப் போர் நிலவி வருகிறது. இதனால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் அதிகரிக்க திட்டமிட்டிருந்தது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருப்பதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் கூறியிருந்தார்.